தமிழக டோல்கேட்களில் இரு மடங்கு வசூல் வேட்டை !! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு

தமிழக டோல்கேட்களில் இரு மடங்கு வசூல் வேட்டை !! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு

தமிழக டோல்கேட்களில் இரு மடங்கு வசூல் வேட்டை !! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு
X

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி உள்ள நிலையில்  அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்வதற்கும், அவசரத் தேவைகளுக்காகவும் மட்டும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும், இன்று முதல் டோல்கேட்களை திறந்து சுங்க கட்டணம் வசூலிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. வருவாய் இழப்பை சரி கட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் ஊரடங்கால் ஒரு மாதத்திற்கும் மேலாக பொது மக்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினரும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் 26 டோல்கேட்களில் சுங்க கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டது. சுங்கச்சாவடிகளுக்கு ஏற்றவாறு ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை சூரப்பட்டு, வானகரம், நெமிலி, வாணியம்பாடி, சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, லம்பாலகுடி, மதுரை போகலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை உள்பட 26 இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலானது. மதுரவாயலில் இருந்து தாம்பரம் செல்லும் பாதையில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது ; ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி அடிப்படையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்படும். ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்குவதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு சுங்கச்சாவடிகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 சதவீதம் வரையில் இருக்கும். ஊரடங்கு நீடிப்பதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலும் குறைவாகவே இருக்கும். எனவே ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் குறைந்த பாதைகளே செயல்படும் என அவர்கள் கூறினர்.

Newstm.in

Next Story
Share it