1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவை பரப்பியிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

கொரோனாவை பரப்பியிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!


சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா எனும் தொற்றுநோய் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்த நாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா இன்று உலகையே அச்சுறுத்தி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் வூகான் பரிசோதனை கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. வைரஸ் பரவியது குறித்து டொனால்ட் டிரம்ப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் சீனா இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்பியதா என கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் வைரஸ் பரவியதை சீனா ஆரம்ப கட்டத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த உலகமே தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.
 
கொரோனாவை பரப்பியிருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

தற்போது கொரோனா குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சீனாவுக்கே தெரியாமல் அந்த வைரஸ் தவறாக வெளியே வந்துவிட்டிருந்தால் தவறு என்றாகிவிடும். ஒரு வேளை சீனாவுக்கு தெரிந்தே வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.
 
சீனாவையும் மீறி தவறுதலாக அந்த வைரஸ் வெளியே வந்துவிட்டதா அல்லது வேண்டுமென்றே வெளியே பரப்பப்பட்டதா. இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களும் வைரஸ் பரவியது குறித்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார். அவர்களது விசாரணை முடிவுகள் என்ன வருகிறது என்பதை பார்ப்போம். நாங்களும் விசாரித்து வருகிறோம். அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 0.33 சதவீதமாக உள்ளதாக கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

newstm.in 


 

Trending News

Latest News

You May Like