கொரோனா விவகாரத்தில் உள்ளூர் கவுன்சிலர் மாதிரி பேசிய ட்ரம்ப்!

கொரோனா விவகாரத்தில் உள்ளூர் கவுன்சிலர் மாதிரி பேசிய ட்ரம்ப்!

கொரோனா விவகாரத்தில் உள்ளூர் கவுன்சிலர் மாதிரி பேசிய ட்ரம்ப்!
X

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கிருமி நாசினியை ஊசி மூலம் செலுத்தியும், புறஊதா கதிர்களை உட்புகுத்தியும் சிகிச்சை அளிக்கலாம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களை சந்தித்த போது பேசிய அவர், சூரிய வெளிச்சத்தில் கொரோனா வைரஸ் மிக விரைவில் மடிவதாகவும், கிருமி நாசினியான ஐசோபுரொபில் ஆல்கஹால் வைரஸை 30 விநாடிகளில் கொல்வதாகவும் அவா் கூறினார். எனவே கிருமி நாசினியை நுரையீரலுக்குள் செலுத்தி கிருமிகளை கொல்வது குறித்து ஆராய வேண்டும் என்றார். மேலும், புறஊதாக் கதிர்களை செலுத்தி, வைரஸை அழிப்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

டிரம்ப்பின் இந்தக் கருத்து மருத்துவ நிபுணா்கள் இடையே பெரும் சா்ச்சையை எழுப்பியுள்ளது. இப்படி பேசி அவர் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்ரம்ப் பேசியதை பொதுமக்கள் பின்பற்றினால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

newstm.in

Next Story
Share it