கொரோனாவை சீன வைரஸ் என்று கூறும் டிரம்ப் !! அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுத்த TikTok

கொரோனாவை சீன வைரஸ் என்று கூறும் டிரம்ப் !! அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுத்த TikTok

கொரோனாவை சீன வைரஸ் என்று கூறும் டிரம்ப் !! அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுத்த TikTok
X

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த சமயத்தில் தான் கொரோனா பாதிப்பு, இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்று நடை பெற்று கொண்டிருக்கிறது.

அதையெல்லாம் தாண்டி ஒக்லஹாமா மாகாணத்தின் துல்சா நகரில் கடந்த சனிக்கிழமையன்று டொனால்ட் டிரம்பின் முதல் பிரச்சார நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டது. அட அவருடைய முதல் பிரச்சாரத்திற்கும் டிக்டாக்கிற்கும் என்ன சம்மந்தம் ? என்ற கேள்வி இந்த இடத்தில் எழலாம்.

சுமார் 19 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் டிரம்பின் பிரச்சாரத்தை பார்க்க சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கான டிக்கெட் முன்பதிவும் நடந்து வந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், இருக்கைகளை ஒதுக்குவதற்காகவும், எத்தனைபேர் கலந்து கொள்கிறார்கள் என்ற கணக்கீட்டிற்காகவும் முன்பதிவு நடப்பது வழக்கம்.

இங்கு தான் டிக்டாக் பயன்படுத்தும் அமெரிக்க சிட்டிசன்களும், நெட்டிசன்களும் தங்கள் வேலையை காட்டத் தொடங்கினர். டிரம்பின் பிரச்சாரத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவே டிரம்ப் எதிர்ப்பு பிரச்சாரத்தை டிக்டாக்கில் தொடங்கினர்.

டிரம்பின் பிரச்சார கூட்டத்திற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என்று வீடியோ எடுத்து டிக்டாக்கில் பரவ விட, அது அமெரிக்கா முழுக்க வலம் வந்தது.

இந்த வீடியோவைப் பார்த்து சுமார் 8 லட்சம் பேர் இந்த நிகழ்விற்காக முன்பதிவு செய்தனர். இதைப்பார்த்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் படுகுஷி ஆகியிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி பிறகும் கூட காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துப்போனது தான் மிச்சம்.

லட்சக்கணக்கானவர்கள் மத்தியில் பேசப்போகிறோம் என்று ஆவலுடன் இருந்த டிரம்ப், காலியாக இருந்த அரங்கத்தைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்புத்துறையினரின் அறிக்கைப்படி வெறும் 6,500 பேர் மட்டுமே இந்த நிகழ்விற்கு வந்திருந்தனர்.

ஆனால், டிரம்ப் தரப்பு அதனை மறுத்ததோடு, சில டிக்கெட்டுகளை பல்வேறு காரணங்களுக்காக தாங்களே கேன்சல் செய்துவிட்டதாகவும் கூறி சமாளித்திருக்கிறது. டிரம்பால் சீன வைரஸ் என்று சொல்லப்படும் கொரோனா , அமெரிக்கர்களை கதிகலங்க வைத்து வரும் நிலையில், சீனாவின் ஆப்பான டிக்டாக் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்க அரசியலில் பல்வேறு கேள்விகளையும், பெரும் பரபரப்பையும் எழுப்பியுள்ளது.

Newstm.in

Next Story
Share it