ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. நடுங்க வைக்கும் கொடூரம்..

 | 

எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எத்தியோப்பியா நாட்டில் பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதப் பேழை ஒன்று பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பேழையை கொள்ளையடிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று தேவாலயத்தில் பேழையை கொள்ளையடிக்க திட்டம்போட்டது. எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளுக்கு பிரதமர் அபி அகமது தடை விதித்திருந்தார். இதனால் இந்தகாலக்கட்டம்  தான் சரியானது என அக்கும்பல் திட்டத்தை செயல்படுத்த திட்டம் தீட்டியது.

அதன்படி ஆயுதம் ஏந்திய கொள்ளைக்கும்பல் தேவாலயத்திற்கு சென்றது. அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தேவாலயத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஈவு இறக்கமின்றி அவர்களை கொலை செய்துள்ளது அக்கும்பல்.  

இந்தப் பேழையை கொள்ளை அடிக்க நடந்த கொடூர வன்முறையில் சுமார் 800 பேர் வரை கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொடூர கொலைசம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இணையசேவை மற்றும் மொபைல் டேட்டா தடை செய்யப்பட்டதாலேயே இந்த கொடூரம் வெளி உலகத்திற்கு தெரியாமல் போயுள்ளது. இந்த கோர தாக்குதலில் பேராலயத்தின் பாதிரியார் மட்டும் உயிர் தப்பியுள்ளார். பெரும் அச்சத்தில் இந்த கோரத்தை விவரித்த அவர், சம்பவத்தின் போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் புனித பேழையை பாதுகாக்க தேவாலயத்திற்கு விரைந்து சென்றனர். 

அப்போது அவர்களை கொடூரமாகவும், கண்மூடித் தனமாகவும் தாக்கி கொன்று குவித்துள்ளனர். தேவாலயங்களிலும், அதன் சுற்றுவட்டார தெருக்களிலும் பல நாட்களாக சடலங்கள் கிடந்தது. இறக்கம் இல்லாமல் அனைவரையும் கொடூர கொலை செய்த அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது என்று பாதிரியார் தெரிவித்தார். 

அதேநேரத்தில், இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது அரசு சார்பு படைகளே எனவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் எனவும் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP