ஊரடங்கில் சோகம்.. அலுவலகத்திலே தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

ஊரடங்கில் சோகம்.. அலுவலகத்திலே தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

ஊரடங்கில் சோகம்.. அலுவலகத்திலே தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!
X

மதுரை மாநகர மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர காவல் துறையில் மோப்பநாய் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்(45). காவல்துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்திய பல வழக்குகளில் விஜயகுமாரின் போலீஸ் நாய்கள் குற்றவாளிகளை பிடிக்க உதவியது. 

இந்நிலையில், விஜயகுமார் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மோப்பநாய் பிரிவு அலுவலகத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தூக்கில் தொங்கியப்படி காணப்பட்டதை கண்ட சக காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் விஜயகுமாரின் உடலை கைப்பற்றிய தல்லாகுளம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


பிரேத பரிசோதனைக்காக உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் தடையங்கள் ஏதும் உள்ளதா எனவும், அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

newstm.in 

Next Story
Share it