தெலங்கானாவில் சோகம்..! ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி..!

வாரங்கல் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில் தண்டவாள இரும்புகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மமுனூர் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக, ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரியில் இருந்த இரும்பு தண்டவாளங்கள், ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதனால், ஆட்டோவில் இருந்தவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இரும்பு தண்டவாளங்களுக்கு அடியில் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.