1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS:- 24 மணி நேரமும் உங்களை கண்காணிக்கும் கூகிள் - உடனே இதை மாற்றுங்கள்..!

#BIG NEWS:- 24 மணி நேரமும் உங்களை கண்காணிக்கும் கூகிள் - உடனே இதை மாற்றுங்கள்..!


உலகின் மிகப் பெரிய தேடுதல் தளமான கூகுள் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், உங்களைப் பற்றி கூகுளுக்கு தெரியுமா..? நன்றாகவே தெரியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் இருந்து, போன மாதம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது வரை உங்களை பற்றி கூகுளுக்கு எல்லா விஷயங்களும் அத்துப்படி.

Do you know the reason behind Google's updates on search algorithms? Its  great | Google Updates: கூகுள் ஏன் தேடல் வழிமுறைகளைப் புதுப்பிக்கிறது?  தெரியுமா? | Technology News in Tamil
உலகின் மிகப்பெரிய இன்டர்நெட் சேவை தரும் கூகுள், ஒவ்வொரு யூசர்களின் கணக்குகளையும் கையாண்டு வருகிறது. கூகுளில் நாம் தேடுவதில் இருந்து நமது மொபைலில் நாம் பார்க்கும் விளம்பரம், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களையும் ‘கூகுள்’ பதிவு செய்கிறது.

உங்களுடைய ஒட்டு மொத்த ஜாதகமும் கூகுளில் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆனால், இதன் மூலம் நீங்கள் உங்களுக்கென உள்ள கஸ்டமைசேஷன் (customization) வசதியை இழப்பீர்கள்.

இணையத்தில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டுக்கு செல்லுங்கள். இதில் மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன. இதில் முதல் இரண்டு பிரிவுகள் வெப் மற்றும் ஆப் செயல்பாடு தொடர்பானது. Chrome-ல் நுழையும் போது, நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதில் மேலே சென்று பார்த்தல் தேதி வாரியாக உங்கள் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் நீங்கள் பில்டர் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்போது delete பொத்தானை க்ளிக் செய்து அழிக்கலாம்.

மேலும், அந்தப் பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை (symbol) க்ளிக் செய்து, தனிப்பட்ட தரவுகளையும் நீக்கலாம். சமீபத்தில் கூகுள் வெளியிட்ட அறிக்கையின் படி, ‘மூன்று மாதங்களுக்கு மேல், அல்லது 18 மாதங்களுக்கு மேல் உள்ள தகவல்களை கூகுள் தானாகவே நீக்கி விடும்’ என கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக கூகுள் அசிஸ்டன்ட் பற்றி பார்க்கலாம். கூகுள் அசிஸ்டன்ட் வசதி உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றால், கீழ்க்கண்ட முறைகளை செய்து அதன் செயல்பாட்டை நிறுத்தலாம்.

10 Tips to Get the Most Out of Google Assistant | PCMag
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் அல்லது டேப்லெட்டில் ‘ஹே கூகுள், ஓபன் அசிஸ்டன்ட் செட்டிங்ஸ்’ என்று சொல்லவும். அதில் ஆன் மற்றும் ஆஃப் வசதி இடம்பெற்றிருக்கும். அதில் ஆஃப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அல்லது செட்டிங்ஸ் பகுதியில் சென்று, ‘கூகுள் அசிஸ்டன்ட்’ என்ற பக்கத்தை தேடவும்.

அதில் ‘அசிஸ்டன்ட் டிவைஸ்’ என்பதை க்ளிக் செய்தால் ஒரு ஆன் - ஆஃப் தோன்றும். அதில் ஆஃப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான், இனி நீங்கள் கூகுளால் கண்காணிக்கப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றிய தகவல்களும் இனி கூகுளுக்கு கிடைக்கவும் கிடைக்காது.

Trending News

Latest News

You May Like