1. Home
  2. தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..! ஊட்டியில் படகு சவாரி, மலை ரயில் ரத்து..!

1

கோடை சீசனையோட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை காணவும் பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஊட்டியில் ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா ஆகியவை பிரபல சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இதனால் செல்லவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் வானிலை மையம் அறிவித்துள்ளது. ஊட்டி அவளாஞ்சி அப்பர் பவானி எமரால்டு படுகு இல்லம் பஸ் நிலையம் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, கோத்தகிரி ,கேத்தி, லவ் டைல் மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை வெளுத்து கட்டியது.

தொடர் கன மழை காரணமாக படகு சவாரி, மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொட்டபெட்டா காட்சி முனை மே 22ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.இதனால் இங்கு செல்ல முடியாமலும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது இதேபோல பைக்காரா படகு இல்லத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இரண்டு முக்கிய சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Trending News

Latest News

You May Like