தமிழகத்தில் இன்று முதல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு !!

 | 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கிராமப்புற கோவில்களில் 3 மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் வழிபட தொடங்கியுள்ளனர். கிராமப்புற தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் இன்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் வழிபாடு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

1.கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

2. முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி தரைத்தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

3. சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக கண்காணிப்பார்கள்.

4. கிராமங்களில் உள்ள பெரிய கோவில்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP