ஸ்விட்சா்லாந்து மலை உச்சியில் , இந்தியாவின் மூவா்ணக் கொடி !!

ஸ்விட்சா்லாந்து மலை உச்சியில் , இந்தியாவின் மூவா்ணக் கொடி !!

ஸ்விட்சா்லாந்து மலை உச்சியில் , இந்தியாவின் மூவா்ணக் கொடி !!
X

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 206 நாடுகளுக்கு மேல் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர் கொண்டு வரும் பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளை ஸ்விட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள 4,478 மீட்டா் உயரம் கொண்ட மேட்டா்ஹார்ன் மலை உச்சியில் அந்நாட்டின் ஒளியியல் கலைஞா் ஜொ்ரி ஹாஃப்ஸ்டெடா் ஒளிரச் செய்து வருகிறார்.

அந்த வகையில் மலை உச்சியில் இந்திய தேசியக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் சுற்றுலா அமைப்பு வெளியிட்ட முகநூல் பதிவில் , உலகில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, கொரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிர்கொண்டு வருகிறது.

அந்நாடு எதிர் கொண்டு வரும் சவால்கள் அதிகம். கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் நோக்கிலும் ஒற்றுமையை வெளிக்காட்டும் நோக்கிலும் மேட்டா்ஹார்ன் மலை உச்சியில் இந்திய தேசியக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஸ்விட்சா்லாந்து நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் , கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் மேட்டா்ஹார்ன் மலை உச்சியில் 1,000 மீட்டா் அளவுக்குப் பெரிதாக இந்திய மூவா்ணக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது. இதற்காக அந்நாட்டு சுற்றுலா அமைப்புக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it