1. Home
  2. தமிழ்நாடு

இக்கால பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை: அமைச்சர் பேச்சால் சர்ச்சை !!

இக்கால பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை: அமைச்சர் பேச்சால் சர்ச்சை !!


நவீன பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்று கர்நாடகா மாநில அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, தற்போதுள்ள நவீன கால பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர். திருமணம் செய்துக் கொண்டாலும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் விரும்புவதில்லை. வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நம் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக் கிறது. இது நல்லதல்ல. துரதிர்ஷ்டவசமாக மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் இந்திய மக்களிடம் அதிகரித்து வருகிறது. பெற்றோர் தங்களுடன் இருப்பதையே பலர் விரும்பு வதில்லை என்றார்.

இக்கால பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை: அமைச்சர் பேச்சால் சர்ச்சை !!

தொடர்ந்து பேசிய அவர், மன அழுத்தத்தை எப்படி குறைக்க வேண்டும் என்பதை உலகுக்கு நாம் போதிக்க வேண்டும். ஏனென்றால் யோகா, தியானம் மற்றும் பிராணயாமா ஆகியவற்றை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்திருக் கிறார்கள், என அமைச்சர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like