இன்று மாசி செவ்வாய் பஞ்சமி! இதை செய்ய மறந்திடாதீங்க!

இன்று மாசி செவ்வாய் பஞ்சமி! இதை செய்ய மறந்திடாதீங்க!

இன்று மாசி செவ்வாய் பஞ்சமி! இதை செய்ய மறந்திடாதீங்க!
X

சக்தியை இஷ்ட தெய்வமாக வழிபடுபவர்கள் பஞ்சமியின் சிறப்பை அறிவார்கள். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசையை அடுத்த் 5 வது நாள் பஞ்சமியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த பஞ்சமியில் அம்பிகையின் மறு உருவமாக எழுந்தருளியுள்ள வாராஹியை வழிபட எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். ஆத்மார்த்தமாக வழிபட்டால், எதிர்ப்புகள் அகலும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் கைகூடி வரும். இல்லத்தில் தனம் தானிய வளங்களை பெருக்கி வாழ்வில் சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்கின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!


ஆடி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரியிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியை போல தை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் தினங்கள் சியாமளா நவராத்திரி இதே போல் பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியும் மிக மிக முக்கியமானவை என்கின்றன சாக்த சாஸ்திர நூல்கள்.இந்த தினங்களில் அருகில் உள்ள அம்பிகை ஆலயத்திற்கு சென்று ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதனை செய்வதுடன் வீட்டிலும் அம்பிகை துதிகளை பாடலாம். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரித்து இனிப்புகளை நைவேத்தியமாக படைக்கலாம். அதில் மிக முக்கியமான தினமாக பஞ்சமி பிப்ரவரி 16ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

பஞ்சமி தினம் அதுவும் அம்பிகைக்கு மிகவும் உகந்த செவ்வாய்க்கிழமைகளில் வருவது கூடுதல் விசேஷம். பஞ்சமி தினத்தில் பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் வழங்கிட மகத்துவம் பெறலாம் என்கின்றனர் தேவி உபாசகர்கள்.சியாமளா நவராத்திரி காலத்தில், தினமுமே அம்பிகையை வழிபடலாம் என்றாலும் மிகக் குறிப்பாக பஞ்சமியை தவற விடக் கூடாது. ஆலயங்களில் அம்பிகை தரிசனம் செய்வதுடன் வீட்டில் உள்ள அம்பாள் திருமேனி, அல்லது படங்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் , அம்பிகை பாடல்கள், துதிகள் பாராயணம் செய்யலாம்.
பஞ்சமியில் அம்பிகையை வழிபடுவதுடன் விஷ்ணு அம்சமாக திகழும் சப்த மாதர்களில் ஒருத்தியான வாராஹி தேவியையும் வழிபட வேண்டும் என்பது ஐதிகம். இதன் மூலம் வாழ்வில் பெரும் பேரின்பதை அடையலாம் என்பது ஆச்சார்யர்கள் வாக்கு.

Tags:
Next Story
Share it