1. Home
  2. தமிழ்நாடு

இன்று நிழல் இல்லாத நாள்.. மண்ணுலகில் ஒரு அதிசய நிகழ்வு.!

இன்று நிழல் இல்லாத நாள்.. மண்ணுலகில் ஒரு அதிசய நிகழ்வு.!


சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆண்டுக்கு இருமுறை மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடைபெறும்.

சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆண்டு இன்று பகல் 12.07க்கு நிழல் இல்லாத நாள் தோன்றியது. பகலும் இரவும் சம்மாக வரும் நாள் என்பதால்இந்த நிகழ்வு கடந்தாண்டும் இதே நாளில் ஏற்பட்டது. இந்த அரிய நிகழ்வை கண்டுகளிக்க கடந்த ஆண்டு பிர்லா கோளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கால் ஏற்பாடு செய்யப்படவில்லை

இந்த அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in 


 

Trending News

Latest News

You May Like