மக்களின் கவனத்திற்கு...! ரேஷனுக்கான டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்!

மக்களின் கவனத்திற்கு...! ரேஷனுக்கான டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்!

மக்களின் கவனத்திற்கு...! ரேஷனுக்கான டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்!
X

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் வகையில், ரேசன் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த டோக்கன்களில் பொருட்கள் வழங்கும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் அந்த நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டோக்கன் வழங்கும் தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என்றும் மே 4 ஆம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it