1. Home
  2. தமிழ்நாடு

பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம் மின் மோட்டார்களை இயக்க மின்வாரியம் வேண்டுகோள்..!

1

தமிழ்நாடு மின்சார வாரிய, கரூர் மண்டல தலைமைப் பொறியாளர்(பொ) சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விவசாயிகள், பகல் நேரத்தில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான, சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி சோலார் மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களைக் கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவினை குறைக்க முடியும்.

நமது நாட்டினை பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கத்தில், பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சோலார் பவர் மின்சாரத்தை, அனைத்து விவசாயிகளும் முழுமையாக பயன்படுத்தி, தங்களது விவசாய மின்மோட்டார்களை உபபோகப்படுத்தி தண்ணீர் இறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like