மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் !! தமிழக அரசு அறிவிப்பு...

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் !! தமிழக அரசு அறிவிப்பு...

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் !! தமிழக அரசு அறிவிப்பு...
X

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஜூலை 15 ஆம் தேதிக்கு உள்ளாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் பொதுமுடக்க பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 30 வரை அவகாசம் வழங்கியுள்ளது.

அன்றைய தேதிவரை என அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முடிந்தவரை இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it