அமெரிக்காவில் புலி, சிங்கம், பூனைக்கு கொரோனா..! திணறும் உயிரியல் பூங்கா..!

அமெரிக்காவில் புலி, சிங்கம், பூனைக்கு கொரோனா..! திணறும் உயிரியல் பூங்கா..!

அமெரிக்காவில் புலி, சிங்கம், பூனைக்கு கொரோனா..! திணறும் உயிரியல் பூங்கா..!
X

அமெரிக்காவின் பிரபல உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து பூங்கா சுற்றுலா பயணிகள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் கடந்த மார்ச் மாத இறுதியில் அங்குள்ள நடியா என்ற புலிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து புலி, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏப்ரல் 5ஆம் தேதி வெளியான முடிவில் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

விலங்குக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உலக நாடுகளை அதிர்வடையச் செய்தது. 

இந்நிலையில் தற்போது பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் மேலும் 4 புலிகள் மற்றும் 3 ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் பூங்காவில் உள்ள 7 பூனைகளுக்கும் கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொரோனா தொற்றானது பூங்காவில் பணிபுரிந்து வந்த ஊழியரிடம் இருந்து பரவியிருக்கலாம் எனவும் மேலும் கொரோனா தொற்று பரவமால் இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in 

Next Story
Share it