1. Home
  2. தமிழ்நாடு

இனி பான் எண் இல்லாதவர்களும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்..?

1

வங்கிகளில் ரொக்க பண பரிவர்த்தனை செய்வோரின் விபரங்கள், வருமான வரித்துறையால் சேகரிக்கப்படுகின்றன. ஒரு முறைக்கு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக ரொக்க பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களிடம், பான் எண் பெறப்படுகிறது. அதன் அடிப்படையில், ரொக்கப்பண பரிவர்த்தனை விபரங்கள் திரட்டப்படுகின்றன.

பான் எண் இல்லாதவர்களிடம், 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணம் பெற வேண்டாம் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும், பல வாடிக்கையாளர்கள் பான் எண் இல்லாமல் ரொக்க பண பரிவர்த்தனைக்கு அனுமதி கேட்பதாக, வருமான வரித்துறையிடம் வங்கிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, நிபந்தனையுடன் ரொக்கப்பணத்தை பெற, வருமான வரித்துறை அறிவுறுத்திஉள்ளது.

அதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும், 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால், அவர்களிடம், ஆதார் எண், வங்கி கணக்கு விபரம். முகவரி, மொபைல் போன் எண் போன்ற தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பின்னரே, ரொக்க பணம் செலுத்த அனுமதிக்கலாம் என, வருமான வரித்துறை நிபந்தனை விதித்துள்ளது.

Trending News

Latest News

You May Like