தூத்துக்குடி சம்பவம் !! நடிகை சனம் ஷெட்டி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பரபரப்பு புகார்...

தூத்துக்குடி சம்பவம் !! நடிகை சனம் ஷெட்டி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பரபரப்பு புகார்...

தூத்துக்குடி சம்பவம் !! நடிகை சனம் ஷெட்டி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பரபரப்பு புகார்...
X

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களை சிறையில் அடைப்பதற்கு முன்னதாக விசாரணை என்ற பேரில் போலீசார் அவர்களை கண் மூடித்தனமாக தாக்கி , ஆசன வாயில் லத்தியை விட்டு கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக பல தரப்பிலிருந்து குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.

இதையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டு என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வரை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் இச்சம்பவம் தேச அளவில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழில் அம்புலி, சவாரி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டதான அறிவிப்பை அவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ; சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எனது புகாரை அதிகாரப்பூர்வமாக இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன்.

Newstm.in

Next Story
Share it