1. Home
  2. தமிழ்நாடு

இந்த நேரத்திலும் விவசாயிகளை கதற வைக்கும் சாயப்பட்டறைகள் !! குமுறும் விவசாயிகள்

இந்த நேரத்திலும் விவசாயிகளை கதற வைக்கும் சாயப்பட்டறைகள் !! குமுறும் விவசாயிகள்


கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 100 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் இயங்கி வந்தன. இதனால், கரூர் வழியாகப் பாயும் அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகளில் சாயக்கழிவுகளை ஆலைகள் திறந்துவிட்டன. இதனால் நிலத்தடி நீர் கெட்டுப்போனது.

இதனால் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாழாக, நீதிமன்றம் சென்று அதற்குத் தடை வாங்கினார்கள் விவசாயிகள். இதனால், 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இப்போது, 50-க்கும் குறைவான ஆலைகளே இயங்கி வருகின்றன.

மறுசுழற்சி செய்து கழிவை ஆலைகள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் இந்தப் பிரச்னை கொஞ்சம் ஓய்ந்தது. ஆனால் மழைக்காலங்களில் சாயக் கழிவுகளை ஆறுகளில் கலந்துவிடும் கொடுமை தொடர்ந்து நடந்து வந்தது.

இந்தச் சூழலில்தான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான 2 விவசாயக் கிணறுகளில் யாரோ மர்ம நபர்கள் சாயக் கழிவை கலந்து விட கிணற்றில் இருந்த தண்ணீரே சிவப்புக் கலருக்கு மாறிவிட்டது.

கருர் மாவட்டம், மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சியில் வரும் மாங்காசோளிபாளையம் என்ற கிராமத்தில்தான், இப்படி கிணறுகளில் மர்ம நபர்கள் சாயக்கழிவைக் கலந்த சம்பவம் அரங்கேறி சம்பந்தப்பட்ட விவசாயிகளைப் வேதனை அடைய வைத்திருக்கிறது.

கொரோனா பரவும் இந்த நேரத்திலும் அரசு எங்களுக்கு போதிய உதவிகள் எதுவும் செய்யவில்லை , இப்போது சாயப்பட்டரை முதலாளிகளும் இது போல் செய்தால் நாங்கள் என்ன செய்வது. அரசு தான் இதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என கண்ணீரோடு போகின்றனர் விவசாயிகள்.

Newstm.in

Trending News

Latest News

You May Like