1. Home
  2. தமிழ்நாடு

‘ஹாப்பி குட் ப்ரைடே’ன்னு மெஸேஜ் அனுப்பாதீங்க ப்ளீஸ் !!

‘ஹாப்பி குட் ப்ரைடே’ன்னு மெஸேஜ் அனுப்பாதீங்க ப்ளீஸ் !!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு 'பெரிய வெள்ளி' என்றும், புனித வெள்ளி என்றும் சொல்லப்படுகிற தினம், அவர்களுக்கு துக்கம் அனுசரிக்க பட வேண்டிய நாள். இது தெரியாமல் தான் நம்மில் நிறைய பேர் அர்த்த ராத்திரியில், அர்த்தம் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு 'happy good friday' என்று வாழ்த்து சொல்லி அவர்களை மேலும் சங்கடப்படுத்துகிறோம். உங்களது வாழ்த்துக்களை இரண்டு நாட்களுக்கு தள்ளிப் போட்டு ஈஸ்டர் தினத்தன்று சொல்லுங்கள்.

இறைமகன் இயேசு கிறிஸ்து மானுட பிறவி எடுத்து மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே பலியாக தந்து, மரித்த நாளைத் தான் 'புனித வெள்ளியாக' கிறிஸ்தவ சகோதரர்கள் அனுசரிக்கின்றார்கள்.

இறைமகன் இயேசு கிறிஸ்து மானுட பிறவி எடுத்து மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே பலியாக தந்தார். அவர் மரித்த நாளே 'புனித வெள்ளியாக' அனுசரிக்கப்படுகிறது. தமக்காக ரத்தம் சிந்திய இயேசுவின் தியாகத்தை கருதி அதனை மக்கள் ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து துக்கம் கொண்டாடுகின்றனர்.

பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இதனை தொடர்ந்து சிலுவை பாதை நடைபெறும். இயேசு இறந்த 3ம் நாள் மீண்டும் உயிர்தெழுந்தார் என்பர் அதுவே ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

Trending News

Latest News

You May Like