பழனி முருகன் தரிசனத்திற்கு இது அவசியம் ..!!

பழனி முருகன் தரிசனத்திற்கு இது அவசியம் ..!!

பழனி முருகன் தரிசனத்திற்கு இது அவசியம் ..!!
X

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த ஜூலை 5-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறது. இதில் அரசு பல விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். ஒருமணி நேரத்துக்கு ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும், www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து வருவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை முதல் தினமும் காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இணைய வசதியில்லாத சாதாரண கைபேசி வைத்துள்ளோர் 04545-242683 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்யலாம்.

பக்தர்கள், தேங்காய், பழம், பூ கொண்டு வர மற்றும் கால பூஜை, அபிஷேகத்தின் போது அமர்ந்து தரிசிக்க அனுமதி இல்லை. முகக்கவசம் உள்ளிட்ட அரசின் விதிகளுக்கு உட்பட்டு பழனி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it