இருமியதால் வந்த விபரீதம்..! கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் அடித்துக் கொலை..!

இருமியதால் வந்த விபரீதம்..! கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் அடித்துக் கொலை..!

இருமியதால் வந்த விபரீதம்..! கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் அடித்துக் கொலை..!
X

கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் குப்தா(34). ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் கணேஷ் குப்தா சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்ததை கண்ட கணேஷ் குப்தா வேறு வழியாக சென்றுள்ளார். நடந்து செல்லும் போது அவர் இருமிக் கொண்டே சென்றதாக தெரிகிறது.
  

இதைப்பார்த்த சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயத்துடன் மயக்கம் அடைந்த அந்நபர் அங்கிருந்து சாலையோர சாக்கடையில் விழுந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை மீட்டப்போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் இருமிக்கொண்டே சென்றதால் அவர் ஒரு கொரோனா நோயாளி என்று சந்தேகித்து தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தற்செயலான மரணம் என்றே இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடக்பாடா காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

newstm.in 

Next Story
Share it