1. Home
  2. தமிழ்நாடு

இந்த நடிகர் என்னை ஏமாற்றிவிட்டார்... தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை ஸ்ரீபிரியா..!

1

Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "எல்லா உச்சக்கட்ட நடிகர்களும் நடித்த ஸ்ரீபிரியா, ஒரு சீரியஸான நடிகையாக பார்க்கப்பட்டவர்.

Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "எல்லா உச்சக்கட்ட நடிகர்களும் நடித்த ஸ்ரீபிரியா, ஒரு சீரியஸான நடிகையாக பார்க்கப்பட்டவர்.

ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் கார்த்திக், ராகினி ஷூட்டிங் நடந்தபோது, அங்கு வந்த ஸ்ரீபிரியா, இருவரையும் அடித்து உதைத்து, செட்டையே நொறுக்கிவிட்டார். கார்த்திக் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார். கடைசியில் திரைப்பட உலகத்தினர் அத்தனை பேரும் தலையிட்டு, ஸ்ரீபிரியாவின் உயிரை காப்பாற்றினார்கள்.. அப்போது திரைப்பட உலகினர் கார்த்திக்கிற்கு விட்ட சாபம் சொல்லி மாளாது.

1982-ல் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபருடன் ஸ்ரீபிரியாவுக்கு திருமணம் நடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று உள்ளது. அதேபோல, பிரபுவை ஸ்ரீபிரியா காதலித்ததாகவும், ஆனால், அதை சிவாஜி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்கூட சில அரசல்புரசல் செய்திகள் உண்டு.. இறுதியில், நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாருடன் 1988-ல் ஸ்ரீபிரியாவுக்கு திருமணம் நடந்தது.

குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, சின்னத்திரை என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் ஸ்ரீபிரியா. ஆனால், மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி நடித்த கேரக்டரை தவறவிட்டதற்காக நிறைய வருத்தப்பட்டுள்ளார்.. எனினும், ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்" படத்தில் ஸ்ரீபிரியாவின் நடிப்பு முத்திரை பதித்தது. இன்றுவரை அவரது நடிப்பு அதில் பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீபிரியா நடித்த படங்களிலேயே, வைர கிரீடம் வைத்தது போன்ற படம் என்றால் அது "அவள் அப்படித்தான்" படம்தான். இன்றுவரை ஸ்ரீபிரியாவின் புகழை தக்கவைக்கிறது அந்த படம்.

சினிமா வாய்ப்பு குறைந்ததுமே சினிமாவில், டைரக்‌ஷன் செய்ய போனார் ஸ்ரீபிரியா. சாந்தி முகூர்த்தம் என்ற பெண்கள் விழிப்புணர்வை படத்தை எடுத்தார். நன்றாக ஓடாவிட்டாலும், நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதற்கு பிறகு அடுத்தடுத்த படங்களை இயக்கி, தன்னால் டைரக்‌ஷனும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர்.

இதற்கு பிறகு, கமல் கட்சியில் வந்து சேர்ந்தார்.. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த ஸ்ரீபிரியா, பலவேறு பதிலடிகளை தந்து வந்தார். "அடுத்த 3 அமாவாசையில நானே உங்கள் கட்சிக்கு பால் ஊத்த போறேன்" என்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு துணிச்சலுடன் பதிலளித்திருந்தார் ஸ்ரீபிரியா.

இப்ப கமல் கட்சியில் எல்லாரும் போயிட்டாங்க.. ஆனால் மயிலாப்பூர் தொகுதியில் தான் போட்டியிட்டு தோல்வி அடைந்தபிறகும்கூட, இன்றுவரை கமலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இப்போது 2 பேரும் அறிவாலய வாசலில் நிற்கிறார்கள்.. கமல் எம்பியாகிறாரா? கமல் எம்பியாகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like