இன்று திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம்! பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

இன்று திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம்! பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

இன்று திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம்! பக்தி பரவசத்தில் பக்தர்கள்!
X

மாசி பிரம்மோற்சவ திருவிழா பல சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் பிரசித்தி பெற்ற திருவொற்றியூா் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

திருவொற்றியூா் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா பிப்ரவரி18ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று தொடங்குகிறது. திருத்தேர் ஸ்ரீதியாகராஜசுவாமி கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தேர்நிலையிலிருந்து புறப்பட்டு திருவொற்றியூா் நெடுஞ்சாலை வந்து தெற்குமாடவீதி,

மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் திருவொற்றியூா் நெடுஞ்சாலை வந்து சன்னதி தெரு வழியாக வந்து இறுதியாக திரும்பவும் தேர் நிலைக்கு வந்தடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாணசுந்தரா் திருக்கல்யாணம் பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:
Next Story
Share it