1. Home
  2. தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு !!

திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு !!


நாளை முதல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதை அடுத்து அத்யாவசிய பொருட்களை வாங்குவதற்காக இன்று காலை முதலே மளிகை மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் 3 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

எனவே, அன்றைய தினம் மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி கடைகளைத் திறப்போர் மீது சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like