"என் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இவர்கள் தான் சரி!" : சுரேஷ் ரெய்னா பளீர்

"என் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இவர்கள் தான் சரி!" : சுரேஷ் ரெய்னா பளீர்

என் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இவர்கள் தான் சரி! : சுரேஷ் ரெய்னா பளீர்
X

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடும் இவரை ரசிகர்கள் சின்ன தல என்று செல்லமாக அழைக்கின்றனர். 

தல தோனிக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் பலரும் விரும்பும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பது அதிகரித்து வருகிறது. தோனி. சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ள நிலையில், கபில் தேவ், மிதாலி ராஜ் போன்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் ஹீரோவாக யார் நடித்தால் சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ் ரெய்னா துல்கர் சல்மான் அல்லது ஷாகித் கபூர் நடித்தால் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it