1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கு கிடையாது , வழக்கம் போல் இயங்கலாம் !! முதலமைச்சர் அறிவிப்பு

ஊரடங்கு கிடையாது , வழக்கம் போல் இயங்கலாம் !! முதலமைச்சர் அறிவிப்பு


ஊரடங்கை ஏப்ரல் 20ம் தேதி முதல் ஒரு சில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும், இது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்பிறகு கேரளா உள்பட சில மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் கர்நாடகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் அதாவது ஏப்ரல் 23 முதல் கர்நாடகாவில் அத்யாவசிய சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

ஆனால் ஹாட் ஸ்பாட் பகுதிகள் என மத்திய அரசு அறிவித்த இடங்களில் ஊரடங்கு நீடிக்கும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு என்பது கட்டுமானம், சிமெண்ட், இரும்பு, டைல்ஸ், பெயிண்ட், செங்கல் ஆலைகள் மற்றும் அதற்கான வாகன போக்குவரத்துகள் ஆகியவைகளுக்கு தளர்வு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மதுபானக்  கடைகளுக்கு தளர்வு இல்லை, மே 3 வரை அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like