இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு..! ஆதார் கார்டில் சீக்கிரம் இந்த வேலையை முடிங்க..!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வரும் ஆதாரை ஒருவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.. ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரில் உள்ள அடிப்படை தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும்.
ஆதாரில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். இதற்காக ஆதாரை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். ஆதாரை அப்டேட் செய்வதற்கு UIDAI-ல் சிறப்பு வசதி உள்ளது. Myaadhaar அல்லது மை ஆதார் போர்ட்டல் ஆகியவற்றில் updatedocument என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் மை ஆதாரை பயன்படுத்தி இலவசமாக தகவல்களை புதுப்பித்து கொள்ளலாம். இதற்கு myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று அப்டேட் டாக்குமெண்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து ஆதார் நம்பர் மற்றும் கேப்சாவை நிரப்பி OTP யை பெறலாம்.
அதன்பின்னர் OTP யை உள்ளிட்டு பெயர், முகவரி போன்ற அப்டேட் செய்யப்பட வேண்டிய விவரங்களை புதுப்பிக்க வேண்டும். தொடர்ந்து தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும். இந்த செயல்முறையை நிறைவு செய்த பின்னர் ஆதார் அப்டேட்டின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கு அப்டேட் ரெக்வஸ்ட் நம்பரை (URN) சேமித்து வைக்க வேண்டும்.
ஆதாரை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 14, 2024-க்குள் முடிவுக்கு வரவுள்ளது. அதற்கு இலவசமாக ஆதாரை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்றால், அதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆஃப்லைனில் ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் மை ஆதார் இணையத்தில் மட்டுமே இந்த சேவையை டிசம்பர் 14, 2024 வரை இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.