சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திருட்டு!

சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திருட்டு!

சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திருட்டு!
X

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் 12 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் பாத்திரங்கள் திருடு போயுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் பிரபல துணிக்கடையான சரவணா ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்தக் கடையில் இருந்து கடந்த 14ஆம் தேதி 12 லட்சம் மதிப்பிலான 20 விலையுயர்ந்த பட்டுப்புடவைகள், 300 பித்தளை பாத்திரங்கள் திருடு போயுள்ளதாக அக்கடையின் மேலாளார் சுந்தர் ராஜ் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it