நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் !!
நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் !!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் நேற்று முன்தினம் மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிய முதலி தெரு வழியாக பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, விக்ரம் தனது பைக்கால் மோதுவது போல் சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தன் வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து, தட்டிக்கேட்டவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அரிவாளுடன் துரத்தியதால் பயந்து நடுங்கி அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனை அங்கிருந்தவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியினர் மோகனூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் மோகன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
Newstm.in