கணவரின் மர்ம உறுப்பு மீது கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய மனைவி!

 | 

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் சந்தேகம் காரணமாக மனைவி கணவர் மீது கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளவேடு அடுத்த கூடப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இம்ரான் (43) – பவுசியா (38) தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இம்ரான் அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இம்ரானுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி பவுசியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே போல் இரு தினங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பவுசியா, கணவன் இம்ரான் தூங்கிய பிறகு பழி வாங்கினார்.

இரவு இம்ரான் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது பவுசியா கொதிக்கும் நீரை இம்ரானின் பிறப்புறுப்பின் மீது ஊற்றி விட்டார்சூட்டில் இம்ரான் கதறித்துடித்தார். அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இம்ரான் அருகிலிருந்தோர் உதவியுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, இம்ரான் அளித்த புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP