கொரோனா அச்சத்தால் மதுரையில் முழு ஊரடங்கு... என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?

கொரோனா அச்சத்தால் மதுரையில் முழு ஊரடங்கு... என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?

கொரோனா அச்சத்தால் மதுரையில் முழு ஊரடங்கு... என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?
X

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மதுரையில் 7 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதி, பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மேற்கு ஊரகப் பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும். திருப்பரங்குன்றத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கின் போது என்னென்ன இயங்கும்? இயங்காது?

 • மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை கட்டுபாடுகளின்றி இயங்கும்.
 • ஆட்டோ, கால்டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவசர மருத்துவ உதவிக்கு உரிய ஆவணங்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம். இ-பாஸ் உள்ளவர்களை ரயில்நிலையம் மற்றும் விமானநிலையத்திற்கு அழைத்து செல்ல அனுமதிமத்திய, மாநில அரசு அலுவலங்கங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். கட்டுபடுத்த பகுதிகளிலிருந்து ஊழியர்கள் பணிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன் ஜூன் 29 மற்றும் 30 தேதிகளில் செயல்படலாம்.
 • மளிகைக் கடை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியவாசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
 • ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே மக்கள் பயணித்து அத்தியவாசிய பொருட்களை வாங்க வேண்டும்.
 • உணவங்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.
 • முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியேற கட்டுபாடு
 • அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்
 • தன்னர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அரசு அனுமதி பெற்றே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
 • அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி. நீதிமன்றம் செயல்படலாம்.
 • அத்தியவாசிய பொருட்களுக்கான வாகன சேவைக்கு அனுமதி
 • இ-பாஸ் கட்டாயம். திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத்திற்கு மட்டுமே வழங்கபடும்
 • ரயில் மற்றும் விமான நிலையங்கள் செயல்பாடுகில் தற்போதைய நடைமுறையே தொடரும்.

newstm.in

Next Story
Share it