இறந்தவரின் உடலை டிராக்டரில் கொண்டுச் செல்லும் அவலம்!

இறந்தவரின் உடலை டிராக்டரில் கொண்டுச் செல்லும் அவலம்!

இறந்தவரின் உடலை டிராக்டரில் கொண்டுச் செல்லும் அவலம்!
X

ஆந்திராவின், உதயபுரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும், 34 வயது இளைஞரும் கொரோனாவினால் மரணமடைந்தனர். இந்நிலையில், இறந்த முதியவர் உடலை ஜேசிபி எந்திரத்திலும், இளைஞரின் உடலை டிராக்டரிலும் எடுத்து சென்று அதிகாரிகள் அடக்கம் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த காட்சித் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 
மனிதாபிமானம் இல்லாத வகையில் இறந்தவர்களின் உடல்களை ஜேசிபி எந்திரம், டிராக்டர் போன்றவற்றில் கொண்டுச் சென்று அடக்கம் செய்த அதிகாரிகளின் செயலுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பலாச, காசிபுங்கா ஆகிய நகரங்களின் நகராட்சி ஆணையாளர்களையு, சுகாதார துறை ஆய்வாளரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it