திருடர்கள் நகை , பணத்தை திருடல , ஆனாலும் கடுப்பான வீட்டு உரிமையாளர்

திருடர்கள் நகை , பணத்தை திருடல , ஆனாலும் கடுப்பான வீட்டு உரிமையாளர்

திருடர்கள் நகை , பணத்தை திருடல , ஆனாலும் கடுப்பான வீட்டு உரிமையாளர்
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் குமார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் , வீட்டில் அவர்கள் திட்டப்படி திருட நினைத்து வந்த நகை, பணம் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால், கிட்சனுக்குள் நுழைந்து விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அவரது மனைவி, 15 நாட்கள் கழித்து வீடு திரும்பியபோது, பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லை என்பதால் ஏமார்ந்த திருடர்கள் கிச்சனுக்குள் புகுந்து, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என வகைவகையாக சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜன்னல் வழியே சிறுவனை அனுப்பி, பின்பக்க கதவைத் திறந்து திருடர்கள் உள்ளே சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருட வந்த இடத்துல , எப்படியெல்லாம் திருடுராங்க , இவங்க தான் லேட்டஸ்ட் திருடர்கள் என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it