திருடியது தெரிய கூடாது என்பதற்காக , சிசிடிவி கேமிராவையும் திருடி சென்ற திருடன்...

திருடியது தெரிய கூடாது என்பதற்காக , சிசிடிவி கேமிராவையும் திருடி சென்ற திருடன்...

திருடியது தெரிய கூடாது என்பதற்காக , சிசிடிவி கேமிராவையும் திருடி சென்ற திருடன்...
X

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாஞ்சிக்காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ரெத்தினபாய். இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை ஒன்றை நடத்தி வருகிறார் இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அந்த செங்கல் சூளை மூடப்பட்டது.

தற்போது ஊரங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கழிந்த ஒரு வாரத்திற்கு முன் செங்கல் சூளை குறைந்த பணியாளர்களை கொண்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு செங்கல் சூளையில் ,

புகுந்த மர்ம கும்பல் ஒன்று செங்கள் சூளையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டிவி கேமாராக்களை களவாடியதோடு அலுவலக அறையை உடைத்து பொருட்களை திருடியும், சில பொருட்களை சேதப்படுத்தியும் சென்றது. இதுகுறித்து ரெத்தினபாய் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் தொடர்ந்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it