1. Home
  2. தமிழ்நாடு

இயேசு பிறந்த கதை..!

1

நாசரேத்தின் கன்னி மரியாளுக்கும், யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒருநாள் கடவுளின் தூதர் கபிரியேல், கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரிகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றார்’ என்றார்.

இந்த திடீர் அறிவிப்பைக் கேட்டு கலங்கி நின்ற மரியாளை பார்த்து, ‘மரியாளே பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக’ என்றார்.

இதனால் கலக்கமடைந்த மரியாள் ‘இது எப்படி ‌நிகழு‌ம்? நா‌ன் க‌ன்‌னி ஆ‌யி‌ற்றே' என்றா‌ர். ‘கலங்காதே இது கர்த்தருடைய குழந்தை’ என்றார். பின்பு மரியாள் கர்த்தருடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது என கூறினாள். உடனே தேவதூதன் அங்கிருந்து மறைந்து சென்றார்.

திருமணத்திற்கு முன்பே மரியாள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த யோசேப்பு, மரியாளை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல் விலகி செல்ல நினைத்து யோசித்து கொண்டிருந்தான். அப்போது, அவர் கனவில் தோன்றிய தேவ தூதர், தா‌வீ‌தி‌ன் மகனே, ம‌ரியாவை ஏற்று‌க் கொ‌ள்ள அஞ்‌சவே‌ண்டா‌ம். அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என கூறினார்.  இதையடுத்து யோசேப்பு தூக்கம் கலைந்து எழுந்து மரியாள் குறித்து தூதர் சொன்னதை கேட்டு அவளை தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். 

பெத்லகேம் ஊரிலே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தன் பெயரை பதிவு செய்வதற்காக யோசேப்பு பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு சென்றார். அப்போது மரியாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர்களுக்கு சத்திரத்தில் இடம் கிடைக்காததால், ஒரு மாட்டுத் தொழுவத்தில் அடைக்கலம் புகுந்தனர். அப்போது, இயேசு கிறிஸ்து ஆட்டு தொழுவத்தில் மானிடராய் பிறந்தார். 

கிறிஸ்தவர்கள் இந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு டிசம்பர் தொடக்கம் முதலே வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிட்டும், கிறிஸ்துமஸ் மரங்களை வைத்தும், வீடுகளில் குடில்கள் அமைத்தும் கிறிஸ்து பிறந்த நிகழ்வை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like