தேசிய விடுதலை பற்றி கூறிய தீர்க்கதரிசி

தமிழ் நாட்டை சேர்ந்த கவிஞர் சுத்தானந்த பாரதியார் என்பவர் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பாலகங்காதர திலகர் மற்றும் பண்டித மதன் மோகன் மாளவியா ஆகியோருடன் கவிஞர் சுத்தானந்த பாரதியார் பகவத் கீதையைப் படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சபையில் ஒரே கூச்சல், எல்லாரும் உரக்கப் பேசிக் கொண்டிருந்தால் சுத்தானந்த பாரதியார் கோபப்பட்டு இத்தகைய இரைச்சலினால் சுயராஜ்யத்தை ஒருபோதும் அடைய முடியாது என்று கூறினார்.பின் சுயராஜ்யம் எவ்வாறு கிடைக்கும்?

தேசிய விடுதலை பற்றி கூறிய தீர்க்கதரிசி
X

தமிழ் நாட்டை சேர்ந்த கவிஞர் சுத்தானந்த பாரதியார் என்பவர் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பாலகங்காதர திலகர் மற்றும் பண்டித மதன் மோகன் மாளவியா ஆகியோருடன் கவிஞர் சுத்தானந்த பாரதியார் பகவத் கீதையைப் படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சபையில் ஒரே கூச்சல், எல்லாரும் உரக்கப் பேசிக் கொண்டிருந்தால் சுத்தானந்த பாரதியார் கோபப்பட்டு இத்தகைய இரைச்சலினால் சுயராஜ்யத்தை ஒருபோதும் அடைய முடியாது என்று கூறினார்.பின் சுயராஜ்யம் எவ்வாறு கிடைக்கும்? என்று சுத்தானந்த பாரதியைப் பார்த்து கேட்டார் திகலர். கிடைக்கும் அது மகாத்மாக்களின் நினைவாற்றலாலும் ஆசியாலும் கிடைக்கும் என்று சுத்தானந்த பாரதியார் கூறினார்.

தேசிய விடுதலை பற்றி கூறிய தீர்க்கதரிசி

சரி அப்படியென்றால் அத்தகைய மகாத்மா எங்கே இருக்கிறார் என்று கூற முடியுமா? என்று வியப்புடன் திலகர் கேட்க சுத்தானந்த பாரதியும் காபர்டே என்பவரும் ஒரே குரலில், இருக்கிறார். அவர் தான் சீரடியில் உள்ள சாய்பாபா என்றனர். மறுநாள் திலகருடன் சீரடிக்குப் புறப்பட்டார் சுத்தானந்த பாரதியார். சாய்பாபா வழக்கமாக காலையில் வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்தார். திலகரும் மற்றவர்களும் சாய்பாபாவை வணங்கினார்கள் .சாய்பாபா சுத்தானந்த பாரதியைப் பாடச் சொன்னார். அவரும் இந்திப்பாடல் ஒன்றை பாடினார். பின்னர் சுத்தானந்த பாரதியிடம் சாய்பாபா இத்தகைய இரைச்சலால் சுயராஜ்ஜியத்தை அடைய முடியாது என்று லக்னோ காங்கிரஸ் மேடையில் கவிஞர் கூறிய அதே சொற்களை க் கூறினார். இதை கேட்டு திலகர் முதல் அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள். சாய்பாபாவை வியப்புடன் நோக்கினார் பாலகங்காதர திலகர். அவர் சாய்பாபாவிடம் " பின் எவ்வாறு சுயாரஜ்யம் கிடைக்கும்? என்று கேட்டார்.

தேசிய விடுதலை பற்றி கூறிய தீர்க்கதரிசி
அதற்கு சாய்பாபா அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் வருவான். சுயாரஜ்யம் அவனால் கிடைக்கும் " என்றார். சாய்பாபாவின் இந்த பதிலைக் கேட்டு திலகர் மவுனமானார். பின்னர் திலகரிடம் சாய்பாபா " உன்னை நாட்டிற்காக அர்ப்பணித்து கொண்டு சோதனைகளைத் தாங்கிக் கொள். தியாகம் ஒருபோதும் வீணாவதில்லை. ஆண்டவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டு விடு. மவுனமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரு"என்றார். சாய்பாபாவைப் பற்றி திலகர் கூறுகையில், " உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் யாவருக்கும் உரிய மகான் ஆவார்" என்றார். 1947ம் ஆண்டு இந்தியா நாடு சுதந்திரம் பெற்றது. அதற்குரிய காரண கர்த்தர் மகாத்மா காந்தி என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. சாய்பாபாவின் முன்கூட்டியே அறியும் சக்தியை மேற்கண்ட நிகழ்ச்சி உறுதிப்படுத்துகின்றது. ஓம்ஸ்ரீசாய்ராம் !!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it