1. Home
  2. தமிழ்நாடு

ஒரே ஒரு டான்ஸ் ஆடியதால் வந்த பிரச்சனை !! பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் !!

ஒரே ஒரு டான்ஸ் ஆடியதால் வந்த பிரச்சனை !! பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் !!


ஜெய்ப்பூரில் உள்ள கொரானா மருத்துவமனையில் கொரானா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நெல்கோ அதிகாரி ரமேஷ்குமார் , அங்கு சிகிச்சைக்கு தங்கியிருந்தபோது ஜூலை 5ம் தேதியன்று டிஸ்கொ டான்ஸ் ஆடினார் ,இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.

இதனால் கடுப்பான அவர் வேலை செய்த கம்பெனி நிர்வாகம் அவரின் இந்த டான்ஸால் கம்பெனியின் பெயர் கெட்டுப்போனதாகவும் , இதனால் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்வதாகவும் அறிவித்தது.

புவனேஸ்வரின் ,கோராபுட் மாவட்டத்தின் நால்கோ டவுன்ஷிப் பகுதியில் உள்ள நவரத்னா நிறுவனத்தின் சுரங்கப் பிரிவின் டிரான்ஸ்போர்ட் மைன்ஸ் பிரிவில் தற்போது சார்ஜ்மேன் (கிரேடு.ஐ.ஐ) ஆக வேலை பார்க்கும் ரமேஷ் குமார் தனது கொரானா சோதனை அறிக்கை பாசிட்டிவ் என வந்த பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள கொரானா மருத்துவமனையில் ஜூலை 5 ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சமீபத்தில் , 1980 களில் பிரபலமான பாலிவுட் பாடலான ' டிஸ்கோ டான்சர் ' பாட்டுக்கு மருத்துவமனைக்குள்ளேயே அந்த அதிகாரியும் மற்ற இரண்டு பேரும் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.

அந்த வீடியோவில் ட்ராக் பேன்ட் அணிந்திருந்த நோயாளி ரமேஷ் , 'நான் ஒரு டிஸ்கோ நடனக் கலைஞன்' என்ற பாடலுக்கு கால்களை அசைப்பதைக் காண முடிந்தது, மேலும் அவரது மகனும் பல்வேறு நடனப் அமைப்புகளுடன் வீடியோவில் தோன்றுகிறார்.

இந்த வீடியோவை பார்த்து கடுப்பான நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது .கொரானா நோயாளிகள் உற்சாகமாக இருந்தால்தான் நோய் சீக்கிரம் குணமாகுமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் .அதனால் உற்சாகமாக இருந்ததால் அவர் வேலை பறிக்கப்பட்டதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் .

Newstm.in

Trending News

Latest News

You May Like