1. Home
  2. தமிழ்நாடு

அறுந்து விழுந்து கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. பட்டம் விட்டவர்களை கதற விட்ட போலீஸ்..!

அறுந்து விழுந்து கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. பட்டம் விட்டவர்களை கதற விட்ட போலீஸ்..!


மதுரவாயலில் பட்டம் விட பயன்படுத்தப்பட்ட மாஞ்சா நூல் ஒருவரின் கழுத்தை அறுத்ததில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(56). இவர் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். 

மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் அவர் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பட்டம் விடப்பட்ட மாஞ்சா நூல் பறந்துவந்து அவரது கழுத்தை அறுத்தது. இதில் அவரது கழுத்து பகுதி அறுக்கப்பட்டு ரத்தம் வெளியேறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நிலைத்தடுமாறி கிழே விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த நூருல் அமீன்(40), ராகுல்(26), மற்றும் 17 வயதான சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் நூருல் அமீன் பட்டம் தயார் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் பட்டங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக சென்னையில் பல இடங்களில் ஏராளமானோர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பட்டம் விட்டுவருவதை காணமுடிகிறது. எனினும்  தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like