வட்டி பணத்திற்காக இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் !!

 | 

வட்டிக்கு பெற்ற பணத்தை திரும்பத் தராததால் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் நாடுகாணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணிற்கு வெறும் ரூ.3,000 வட்டிக்கு கொடுத்துள்ளார். பெற்ற பணத்தை அப்பெண் நீண்ட காலமாக திரும்ப கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. 

இதனால் அந்த பெண்ணிடம் பணத்தை வசூலிக்க முதியவர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது, பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றால் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒப்புகொள்ள வேண்டும் என  பாலகிருஷ்ணன் எழுத்துபூர்வமாக வாங்கியுள்ளார். அதன்படி தொடர்ந்து அப்பெண்னை வீட்டிற்கு அழைத்த அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதனால் அப்பெண் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பாலகிருஷ்ணன் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் அவரை அதிரடியாக கைது செய்து அவர்மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வட்டிக்கு பணம் திருப்பி கொடுக்காத இளம்பெண்ணை முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP