1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு..!

1

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதலின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

ஏசி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்சமாக 13 ரூபாயில் இருந்து 17 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் 10 ரூபாயில் இருந்து 13 ரூபாயாகவும், அதிகபட்சமாக 26 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும் அதிகரிப்பட்டுள்ளது.

புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், விழுப்புரத்திற்கு 25 ரூபாயில் இருந்து 30 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like