ஆண்களின் ஆபாச வீடியோவை போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்.. நண்பர்களால் ஏற்பட்ட சிக்கல் !

ஆண்களின் ஆபாச வீடியோவை போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்.. நண்பர்களால் ஏற்பட்ட சிக்கல் !

ஆண்களின் ஆபாச வீடியோவை போலீசுக்கே அனுப்பிய ஆசிரியர்.. நண்பர்களால் ஏற்பட்ட சிக்கல் !
X

ராமநாதபுரம் மாவட்ட குறை தீர்க்கும் பிரிவு போலீசார் கண்ணன் என்பவர் செல்போன் எண்ணிற்கு கடந்த ஜூன் 17 ஆம் தேதி, சில போட்டோக்கள், வீடியோக்கள் வந்துள்ளன. 

அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆண்கள் சிலர் நிர்வாணமாக இருப்பது, பாலியல் உறவு கொள்வது ஆகிய வீடியோக்கள் அந்த எண்ணிலிருந்து வந்திருந்தது. 

போலீசாரின் செல்போன் எண்ணுக்கே தைரியமாக ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பியது யார்? என்பது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணையில் இறங்கினர்.  

சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செல்போன் எண் கோவையை சேர்ந்த பிரேம் கிரண் என்பவரது பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர். வழக்கு பதிவு செய்த பிறகு, நேரடியாக கோவை சென்ற தனிப்படை போலீசார், பிரேம் கிரணை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, 29 வயதான பிரேம் கிரண் அங்குள்ள பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றுவதுடன் சொந்தமாக டியூசன் சென்டரும் நடத்தி வருகிறார். 

நண்பர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தவறுதலாக ராமநாதபுரம் குறைதீர்க்கும் எண்ணிற்கு ஆபாசப்படங்களை அனுப்பியதாக பிரேம் கிரண் ஓப்புக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். 

அவரது நண்பர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணைக்கொடுத்து வீடியோவை அனுப்பச்செய்து சிக்கவைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாசமான, அறுவறுக்கத்தக்க போட்டோக்களை அனுப்பிய ஆசிரியர் பிரேம் கிரண் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் காவல்நிலைய ஜாமினில் அவரை விடுவித்தனர். 

இதற்கிடையே, இந்த வழக்கு பின்னணி தெரியாமல், தனது மகனைக் காணவில்லை என்று பிரேம்கிரணின் தந்தை கொடுத்த புகாரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 

newstm.in 

Next Story
Share it