வெளியான லிஸ்ட்..! 2025-ல் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா ?

2025 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 14 கட்டாய விடுமுறை தினங்களும், 3 விருப்ப விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருப்ப விடுமுறை நாட்கள் என்பது அந்ததந்த மாநிலங்களின் பண்டிகைக்கு ஏற்றபடி விடுமுறையை மத்திய அரசு அலுவலகங்கள் உரிய அனுமதி பெற்று அறிவித்துக்கொள்ள முடியும்.
மத்திய அரசு வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் விவரம் வருமாறு:-
1. குடியரசு தினம்
2. சுதந்திர தினம்
3. மகாத்மா காந்தி பிறந்த நாள்
4. புத்த பூர்ணிமா
5. கிறிஸ்துமஸ் தினம்
6. தசரா (விஜய் தஷமி)
7. தீபாவளி (தீபாவளி)
8. புனித வெள்ளி
9. குருநானக்கின் பிறந்தநாள்
10. ஈகைத் திருநாள்
11.பக்ரீத்
12. மகாவீர் ஜெயந்தி
13. மொஹரம்
14. முகமது நபியின் பிறந்தநாள்.
இந்த நாட்களில் எல்லாம் கட்டாயம் விடுமுறை தினம்.
கீழ்க்கண்ட 12 விருப்ப விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று நாட்களை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.
1. தசராவிற்கு கூடுதல் நாள்
2. ஹோலி
3. கிருஷ்ண ஜெயந்தி
4. ராம நவமி
5. மகா சிவராத்திரி
6. விநாயகர் சதுர்த்தி
7. மகர சங்கராந்தி
8. ரத யாத்திரை
9. ஓணம்
10. பொங்கல்
11.ஸ்ரீ பஞ்சமி / பசந்த பஞ்சமி
12. விஷு/ வைசாகி / வைசாகடி / பாக் பிஹு / மாஷாதி உகாதி.