ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணே , நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது !!

ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணே , நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது !!

ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணே , நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது !!
X

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அந்தரதாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒரு பெண்ணை அங்கன்வாடியில் பணிபுரியும் ஒரு பெண் மற்றும் அவரது கணவர், குடும்பத்தினர் என அனைவரும் சேர்ந்து அந்தரதாதி கிராமத்தை சேர்ந்த பெண்ணை கூடி அடித்து உதைத்துள்ளனர்.

அங்கன்வாடி பணிபுரியும் பெண் பெயர் லீலா தேவி. இவரின் பெயரில் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தையில் பிரச்சனையை முடித்து வைத்தனர்.

ஆனால் புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த் அங்கன்வாடி ஊழியர் லீலா, உடனே தனது கணவரிடம் இது கூறிய பின்பு தனது கிராமத்தில் உள்ள சில பேரை கூட்டிக்கொண்டு புகார் கொடுத்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணை இழுத்து வெளியே கொண்டு வந்து அனைவரும் அப்பெண்னை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

ஆனால் அக்கம் பக்கத்தினர் இதனை தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அப்பெண்ணை அடித்தவர்கள் அப்பெண்ணை அடிப்பதோடு மட்டும் நிறுத்தமால், மனிதாபிமானம் அற்ற செயல்களை செய்துள்ளனர்.

அதாவது பாதிக்கப்பட்ட பெண் அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற போது அங்கிருந்தவர்கள் அந்த ஆடை கிழித்து நிர்வாணமாக்கினார்கள். இவர்களிடம் இருந்து தப்ப முயன்ற அந்த பெண்ணை தொடர்ந்து அடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பீகாரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசில் புகார் கொடுத்த இப்பெண்ணுக்கு, நேர்ந்த கொடுமையை பீகார் அரசாங்கம் சரியான நியாம் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it