வேறு பெண்ணுடன் சென்ற கணவன்... நடுரோட்டில் காரை வழிமறித்து தாக்கிய மனைவி!

வேறு பெண்ணுடன் சென்ற கணவன்... நடுரோட்டில் காரை வழிமறித்து தாக்கிய மனைவி!

வேறு பெண்ணுடன் சென்ற கணவன்... நடுரோட்டில் காரை வழிமறித்து தாக்கிய மனைவி!
X

வேறு பெண்ணுடன் காரில் சென்ற கணவனை நடுரோட்டில் வழி மறித்து தாக்கிய ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் பெண் ஒருவர் தனது கணவர் பெடர் சாலையில் வேறு பெண்ணுடன் காரில் செல்வதை பார்த்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கணவரின் காரை சேஸ் செய்து நடுரோட்டில் அந்தக் காரை மடக்கிப் பிடித்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் நடுத்தெருவில் இறங்கிய அந்தப் பெண் கணவரை காரை விட்டு வெளியே இறங்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ காரை விட்டு இறங்கவில்லை. இதனைத்தொடர்ந்து கணவரை கடுமையாக பேசிய அவர் ஒரு கட்டத்தில் காரின் முன் பகுதியில் ஏறி, தனது செருப்பைக் கொண்டு காரின் கண்ணாடியில் அடித்தார். இரண்டு கார்களும் நடுரோட்டில் இருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து இருவரும் அவரவர் கார்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தினர்.


காரை நிறுத்தியவுடன் ஓடிச் சென்று காரை விட்டு தன் கணவனை வெளியே இழுத்த மனைவி, நடு ரோட்டில் வைத்தே அவரை தாக்கினார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் தலையிட்டு மூவரையும் காம்தேவி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதற்காக அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது என்றும் அதை தாங்க முடியாத அந்தப் பெண் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

Next Story
Share it