28 மனைவிகள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய தாத்தா.. இது 37ஆவது!! வைரல் வீடியோ

 | 

முதியவர் ஒருவர் தனது 135 குழந்தைகள் முன்னிலையில், 37ஆவது திருமணம் செய்து கொள்ளும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

மன்னர் ஆட்சி காலத்தில் தான் இதையெல்லாம் நாம் கதைகளில் கேட்டிருப்போம். அதேபோல் தற்போது ஒரு தாத்தா 28 மனைவிகள் முன்னிலையில் 37ஆவது திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. முதியவரின் 28 மனைவிகள் தற்போது உயிருடன் உள்ள நிலையில், அவர்கள் முன்பாகவே தனது 37ஆவது திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தியுள்ளார். 

அந்த 28 மனைவிகளும் திருமணம் முடிந்த பின் அந்த இளம்பெண்ணை உற்சாகமாக வரவேற்கிறன்றனர். இந்த திருமணத்தில் முதியவரின் 135 பிள்ளைகள், 126 பேரக் குழந்தைகளும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தாத்தாவிற்கு 37ஆவது திருமணம் என்பதே அதிர்ச்சியாக இருக்கும் போது அவரது பதிவில் மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ரூபின் சர்மா தனது பதிவில், தைரியமான மனிதர். 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்" என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இந்தத் திருமணம் எங்கே, எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்த திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் கலவையான கருத்துகளை கூறி வருகின்றனர். 


newstm.in


 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP