வீட்டில் இருந்த சீன பொருட்களை எரித்த பிரபல இயக்குனர்!

வீட்டில் இருந்த சீன பொருட்களை எரித்த பிரபல இயக்குனர்!

வீட்டில் இருந்த சீன பொருட்களை எரித்த பிரபல இயக்குனர்!
X

பிரபல இயக்குநரான சக்தி சிதம்பரம் தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீ வைத்து எரித்துள்ளார்.

சார்லி சாப்ளின், கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உள்பட படங்களை இயக்கியவர், சக்தி சிதம்பரம். இப்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களான  டேப் ரிக்கார்டர்கள், செல்போன்கள், மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தீவைத்து கொளுத்தினார். இந்திய வீரர்கள் 20 பேர்களை கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், அது தயாரித்த பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது, அதற்கு நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சீன தயாரிப்பு பொருட்களை தீவைத்து எரித்ததாக அவர் கூறியுள்ளார். 

newstm.in

Next Story
Share it