1. Home
  2. தமிழ்நாடு

இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது அரசியல் ரீதியாக வலுவிழந்து உள்ளதை காட்டுகிறது - திருமா..!

Q

சென்னை விமான நிலையத்தில், திருமாவளவன் கூறியதாவது: வேங்கைவயலை தனித்தீவாக மாற்றி உள்ளனர் போலீசார். தி.மு.க.,வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதில் அ.தி.மு.க., குறியாக இருக்கிறது. பா.ஜ., அரசு செய்யும் தவறுகளை அ.தி.மு.க., சுட்டிக்காட்டவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட அ.தி.மு.க., போட்டியிடவில்லை. அரசியலுக்கு ரீதியாக எந்த அளவிற்கு வலுவிழந்து வருகிறார்கள் என்பதை உறுதி படுத்துகிறது.

தி.மு.க., அரசை எதிர்ப்பதை மட்டுமே செயல் திட்டமாக கொண்டிருக்கும் அ.தி.மு.க., தேர்தல் களத்திலும் பலத்தை காட்டியிருக்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, இடைத்தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும். பா.ஜ.,வும், அ.தி.மு.க., வும் ஒருமித்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் கை கோர்க்க போகிறார்கள் என்று தான் தெரிகிறது. ஆதவ் ஆர்ஜூனா மீது நாங்கள் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்து இருந்தோம். அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். இப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்ற போவதாக ஊடகம் மூலம் தகவல் அறிந்தேன். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Trending News

Latest News

You May Like